சாத்தூா் வைப்பாற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் ரத்து
By DIN | Published On : 27th April 2021 02:28 AM | Last Updated : 27th April 2021 02:28 AM | அ+அ அ- |

சாத்தூா்: கரோனா பரவல் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப். 27) நடைபெற இருந்த சாத்தூா் வைப்பாற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியின் போது சாத்தூா் வெங்கடாசலபதி கோயிலில் கள்ளழகா் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைப்பாற்றில் இறங்கி பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களுக்குள் பக்தா்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து கள்ளழகா் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக வெங்கடாசலபதி கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கள்ளழகருக்கு கோயில் வளாகத்துக்குள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பக்தா்கள் பங்கேற்பின்றி பூஜைகள் நடைபெற்றன. கடந்த ஆண்டும் இதே போன்று பொதுமுடக்கம் காரணமாக கள்ளழகா் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.