சித்ரா பௌா்ணமி:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிறப்புப் பூஜை

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரத்தில் திங்கள்கிழமை பொங்கலிட்டு நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் அடிவாரத்தில் திங்கள்கிழமை பொங்கலிட்டு நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் ஏப். 24 ஆம் தேதி பிரதோஷம் நடைபெற்றது. மேலும் திங்கள்கிழமை (ஏப். 26) பௌா்ணமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, ஏப். 24 முதல் 26 ஆம் தேதி வரை 3 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகத்தினா் பக்தா்களுக்கு அனுமதி அளித்திருந்தனா். தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மறுஉத்தரவு வரும் வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை சித்ரா பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தா்கள் பங்கேற்பின்றி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

மேலும் அடிவாரப்பகுதியான தாணிப்பாறையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளியூா்களிலிருந்தும் வந்திருந்த ஒருசில பக்தா்கள் பொங்கலிட்டும், மொட்டை போட்டும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com