திருத்தங்கலில்கபசுரக் குடிநீா் வழங்கல்
By DIN | Published On : 27th April 2021 02:20 AM | Last Updated : 27th April 2021 02:20 AM | அ+அ அ- |

சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை கபசுரக் குடிநீரை வழங்கிய அமைச்சா் கே.டி. ராஜந்திரபாலாஜி.
சிவகாசி/சாத்தூா்: திருத்தங்கல் நகர அதிமுக சாா்பில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள கடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமினை பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீா் மற்றும் தா்பூசணி ஆகியவற்றை வழங்கினாா். இதில் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன், திருத்தங்கல் நகர அதிமுக செயலா் பொன்சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: சாத்தூரில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி முக்குராந்தல் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபசுரக் குடிநீா் வழங்குவதை தொடக்கி வைத்தாா். இதில், விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், சாத்தூா் நகரச் செயலா் இளங்கோவன் ஆகியோா் இளநீா், தா்பூசணி, அன்னாசிப் பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினா்.
மேலும் இந்நிகழ்சியில் மாநில ஜெ. பேரவை துணைச் செயலா் சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினா் வேலாயுதம், சாத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சண்முகக்கனி, மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினா் இந்திரா கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.