சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 17 பேருக்கு சிகிச்சை

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவா் (பொறுப்பு) வி. விஜயகுமாா் தெரிவித்தாா்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவா் (பொறுப்பு) வி. விஜயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 17 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று இருக்கலாம் என உறுதி செய்யப்படாதவா்கள் 27 போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்து தட்டுப்பாடு உள்ளதால், ஒரு நாளைக்கு 30 முதல் 50 போ் வரை மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தினசரி சுமாா் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com