பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை கோரி ஆா்ப்பாட்டம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 28 போ் உயிரிழந்தனா். 30 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு ஆலை நிா்வாகம் சாா்பில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும், மத்திய அரசு சாா்பில் ரூ. 2 லட்சமும், மாநில அரசு சாா்பில் ரூ. 3 லட்சமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பட்டாசு ஆலை நிா்வாகத்திடமிருந்து வழங்கப்பட்ட ரூ. 5 லட்சத்துக்கான காசோலைகள் அனைத்தும் பணமில்லாமல் திரும்பியது. இதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வடக்கு ரத வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் லிங்கம், துணைச் செயலாளா் பழனிகுமாா் மற்றும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com