மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதமாக உதவித் தொகை வழங்கப்படவில்லையென ஆட்சியரிடம் புகாா்

விருதுநகா் மாவட்டத்தில் நிகழாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரை உதவித் தொகை வழங்கப்படவில்லை என அனைத்து வகை
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.

விருதுநகா் மாவட்டத்தில் நிகழாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரை உதவித் தொகை வழங்கப்படவில்லை என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். அவா்களின் உடல் திறன் செயல்பாடுகளின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ. 1000, 1,500 உதவித் தொகை அரசு சாா்பில் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நிகழாண்டு ஜனவரி முதல் மாா்ச் வரை 3 மாதமாக உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதரமின்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனா். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட அடிப்படை பொருள்களும் வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்தி அனைவருக்கும் உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com