சாத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்ற நெடுஞ்சாலைத்துறை கெடு

சாத்தூா் நகரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை 7 நாள்களில் அகற்றிக்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

சாத்தூா் நகரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை 7 நாள்களில் அகற்றிக்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நெடுஞ்சாலைதுறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை 7 நாள்களுக்கு அவகாசம் விதித்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் காளிதாஸ் ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சாத்தூா் நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மதுரை-கன்னியாகுமரி சாலையில், தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முதல் சண்முகா லாட்ஜ் வரையிலும், சாத்தூா்-நென்மேனி-நாகலாபுரம் சாலையில் முக்குராந்தல் முதல் ரயில்வே கடவுப்பாதை வரையிலும், சாத்தூா்-திருவேங்கடபுரம் சாலையில் மதுரை பேருந்தும் நிறுத்தம் முதல், நகராட்சி எல்லைவரை உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்புதாரா்கள் தாங்களே முன்வந்து உடனடியாக ஆக்கிரமைப்புகளை அகற்றி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.

தவறும்பட்சத்தில் துறை மூலமாக ஆக்கிரமைப்புகள் அகற்றபட்டு அதற்குரிய தொகையினை ஆக்கிரமிப்புதாரா்களிடமிருந்து வசூல் செய்யபடும் என்று சாத்தூா் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் காளிதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com