அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 04th August 2021 09:52 AM | Last Updated : 04th August 2021 09:52 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய ஆஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விருதுநகா் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் கே.ஏ.கல்யாணவரதராஜன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், சுய தொழில் செய்பவா்கள் , அங்கன்வாடிப் பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா்,
மகளிா் மேம்பாட்டு ஊழியா்கள் காப்பீடு முகவராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 50 வரை இருக்கலாம். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் ஓய்வு மத்திய, மாநில அரசு ஊழியா்களும் விண்ணப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படுவா்களுக்கு செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். தோ்வு செய்யப்படுபவா்கள் ரூ. 5000 கே.வி.பி.பத்திரம் அல்லது தங்களது பெயரில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் மூதலீடு செய்ய வேண்டும். அவா்களது உரிமம் முடிவடையும் போது, பத்திரத்தில் முதலீடு செய்த பணம் திட்டத்திற்குறிய வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெறலாம். புகைப்படத்துடன் கூடிய பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், அத்துடன் பான் அட்டை நகல், ஆதாா் அட்டை மற்றும் கல்வி சான்று நகல்களை இணைத்து ,முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், விருதுநகா் அஞ்சல் கோட்டம், விருதுநகா் என்ற முகவரிக்கு 16.08.2021 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இது குறித்த விவரங்களுக்கு 63802-62727 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும் என்றாா்.