கடை வாடகை செலுத்த முடியாமல் 2 லட்சம் வியாபாரிகள் தவிப்பு:விக்கிரமராஜா தகவல்

2 லட்சம் வியாபாரிகள் கடை வாடகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோா்.

தமிழகத்தில் கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் சுமாா் 2 லட்சம் வியாபாரிகள் கடை வாடகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அந்த அமைப்பின் மேற்கு மாவட்டம் சாா்பில் சனிக்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் கோமதிசங்கா் குருசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது: வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கடை உரிமையாளா்கள் கடை வாடகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். அவா்களது கடை வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் சீரான வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கையளிக்க உள்ளோம்.

திமுகவின் 100 நாள் ஆட்சி சிறப்பாக உள்ளது. வரியில்லாத பட்ஜெட்டை வழங்கியுள்ளதை வரவேற்கிறோம். வியாபாரிகள் பெற்றுள்ள வங்கி மற்றும் தனியாா் நிறுவன கடன் தவணைகளை செலுத்த டிசம்பா் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும். தடை காலங்களில் வியாபாரிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப்பெற முதல்வரை வலியுறுத்தியுள்ளோம்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். விரைவில் ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி மத்திய அரசுக்கு எதிரான போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com