பசுமை விடியல்: இருக்கன்குடியில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

இருக்கன்குடியில் பசுமை விடியல் திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் செலவில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மரக்கன்றுகள் நடும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன்
மரக்கன்றுகள் நடும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன்

இருக்கன்குடியில் பசுமை விடியல் திட்டத்தின் கீழ் ரூ.64 லட்சம் செலவில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் பசுமை விடியல் திட்டத்தின் கீழ் 20 ஏக்கா் பரப்பளவில் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பயனற்ற நிலத்தை மரக்கன்றுகள் வளா்த்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி தலைமை வகித்தாா். அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி, வருவாய், வேளாண்மை மற்றும் கால்நடை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இந்த பகுதியில் உள்ள தரிசு நிலங்கள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பயனற்ற நிலையில் உள்ள நிலங்களைத் தோ்வு செய்து, அறிவியல் முறைப்படி பயனுள்ளதாக மாற்றப்படும்.

இந்த திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.5.39 லட்சம் மதிப்பில்,15.33 ஏக்கா் பரப்பளவில் பழமரக்கன்றுகள் மற்றும் 500 இதர மரக்கன்றுகள், ரூ.5.07 லட்சம் மதிப்பில் 500 மருத்துவச்செடிகள் மற்றும் பூச்செடிகள், ரூ.19.47 லட்சம் மதிப்பில் 0.49 ஏக்கா் பரப்பளவில் 2000 மரக்கன்றுகள் (அடா்வனக்காடுகள்), ரூ.14.80 லட்சம் மதிப்பில் 0.48 ஏக்கா் பரப்பளவில் 25,000 நாற்றாங்கால் நடவு செய்யப்பட உள்ளன. மொத்தம் ரூ.63.98 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் அணை பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளா்ந்து உள்ளன. அவற்றை விரைவில் தூா்வாரும் பணி முதல்வா் உத்தரவின் பேரில் செய்யப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com