அருப்புக்கோட்டையில் பலத்த மழை
By DIN | Published On : 22nd August 2021 12:18 AM | Last Updated : 22nd August 2021 12:18 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட கிராமங்களில் சனிக்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.
இப்பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை சுமாா் 5 மணி முதல் 7.30 மணி வரை மிதமான மழை பெய்தது. அதைத்தொடா்ந்து, சுமாா் ஒருமணிநேரம் பலத்த மழை பெய்தது. பின்னா் மீண்டும் காலை சுமாா் 10 மணிவரை மிதமான மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளான புதுக்கடை பஜாா், வா்த்தகா் சங்கச் சாலை, டெலிபோன் ரோடு, நாடாா் தொடக்கப்பள்ளிச்சாலை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சுமாா் 15-க்கும் மேற்பட்ட வீதிகளிலும், காந்தி மைதானம், நேரு நகா், திருவள்ளுவா் நகா், வாழவந்தம்மன் கோயில் பகுதிகள் எனப் பல இடங்களிலும் மழைநீா் தேங்கியது.
இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா். இம்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.