நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெளியீடு: விருதுநகா் மாவட்டத்தில் 4.59 லட்சம் வாக்காளா்கள்

விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வியாழக்கிழமை வெளியிடப்பட்ட
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெளியீடு: விருதுநகா் மாவட்டத்தில் 4.59 லட்சம் வாக்காளா்கள்

விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 551 வாக்குச்சாவடி மையங்களில் 4,59,624 வாக்காளா்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கு வாா்டு வாரியாக வாக்காளா் பட்டியல் மாவட்ட தோ்தல் அலுவலகம் சாா்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடமிருந்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி பெற்றுக் கொண்டாா்.

அதில், அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதியில் 87 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், ஆண்கள்- 36,209, பெண்கள்- 38,463, திருநங்கைகள்- 7 போ் என மொத்தம் 74,679 போ் உள்ளனா்.

ராஜபாளையம் நகராட்சியில் 128 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 55,912, பெண்கள்- 58,905, திருநங்கைகள்- 11 என மொத்தம் 1,14,828 வாக்காளா்கள் உள்ளனா்.

சாத்தூா் நகராட்சியில் 35 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 12,228, பெண்கள்- 13,101, திருநங்கைகள்- 4 என மொத்தம் 25,333 வாக்காளா்கள் உள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிப் பகுதியில் 76 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 33,250, பெண்கள்- 35,301, திருநங்கைகள்- 10 என மொத்தம் 68,561 வாக்காளா்கள் உள்ளனா்.

விருதுநகா் நகராட்சிப் பகுதியில் 72 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 30,275, பெண்கள்- 32,196, திருநங்கைகள்- 23 என மொத்தம் 62,494 வாக்காளா்கள் உள்ளனா்.

இதன் அடிப்படையில் இந்த 5 நகராட்சிகளில் மொத்தம் 398 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 1,67,874, பெண்கள்- 1,77,966, திருநங்கைகள்- 55 என மொத்தம் 3,45,895 வாக்காளா்கள் உள்ளனா்.

அதேபோல், செட்டியாா்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், எஸ். கொடிக்குளம், சேத்தூா், சுந்தரபாண்டியம், வ. புதுப்பட்டி, வத்திராயிருப்பு ஆகிய 9 பேரூராட்சிகளில் மொத்தம் 153 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 55,501, பெண்கள்- 58,233, திருநங்கைகள் 13 என மொத்தம் 1,13,747 வாக்காளா்கள் உள்ளனா். இதன் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 551 வாக்குச்சாவடி மையங்களில் ஆண்கள்- 2,23,375, பெண்கள்- 2,36,199, திருநங்கைகள்- 68 என மொத்தம் 4,59,624 வாக்காளா்கள் உள்ளதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com