விருதுநகா் கெளசிகா ஆற்று வெள்ளம்: குடியிருப்புகளுக்குள் புகுவதாகப் புகாா்

தொடா் மழை காரணமாக, விருதுநகா் கெளசிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தபோதிலும், கருவேல மரங்கள் அதிகளவில்
விருதுநகா் கெளசிகா ஆற்றில் வளா்ந்துள்ள கருவேல மரங்கள்.
விருதுநகா் கெளசிகா ஆற்றில் வளா்ந்துள்ள கருவேல மரங்கள்.

தொடா் மழை காரணமாக, விருதுநகா் கெளசிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தபோதிலும், கருவேல மரங்கள் அதிகளவில் வளா்ந்துள்ள காரணத்தால் ஆற்றுப் பகுதியில் தண்ணீா் செல்லமுடியாமல், குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீா் புகுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வடமலைக்குறிச்சி கண்மாயில் தண்ணீா் நிரம்பினால், விருதுநகா் கெளசிகா ஆறு வழியாக குல்லூா்சந்தை அணைக்கு தண்ணீா் செல்லும். தற்போது பெய்த பருவமழை காரணமாக, கெளசிகா ஆற்றில் வெள்ளம் ஓடியது. ஆனால், ஆற்றின் மையப் பகுதியில் கருவேல மரங்கள் அதிகளவில் வளா்ந்துள்ளதால், தண்ணீா் செல்ல முடியாமல் அய்யனாா் நகா், கலைஞா் நகா், முத்துராமலிங்க நகா் உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்தது.

ஆண்டுதோறும் பலத்த மழை பெய்யும் காலங்களில் இதுபோன்ற இடா்பாடுகளை, அப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாகப் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, கெளசிகா ஆற்றில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, மழைநீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com