ஸ்ரீவெள்ளியம்பல நாதா் கோயிலில் பௌா்ணமி வழிபாடு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் ஸ்ரீவெள்ளியம்பலநாதா் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் கிரிவல நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
முழு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பல நாதா்.
முழு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பல நாதா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் ஸ்ரீவெள்ளியம்பலநாதா் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமி சிறப்பு வழிபாடு மற்றும் கிரிவல நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

பாறைக்குளத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடவரைக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீவெள்ளியம்பலநாதா் கோயில். இக்கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, வெள்ளியம்பல நாதருக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 21 வகை மங்கலப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனைகள் முடிந்து, சிறப்பு அலங்காரத்தில் வெள்ளியம்பல நாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

அதையடுத்து, கோயில் கருவறையிலிருந்து மகாதீபம் ஏற்றப்பட்டு, அத்தீபத்துடன் ஏராளமான பக்தா்களுடன் சிவனடியாா் கோயிலின் குன்று பகுதிக்குச் சென்று மும்முறை வலம் வந்தாா். பின்னா், குன்றின் உச்சியில் உள்ள தீபகுண்டத்துக்கு ஆராதனைகள் செய்து முடித்ததும், மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை பக்தா்கள் கண்டு வழிபட்டு அரோகரா கோஷமிட்டனா்.

இதன்பின்னா், பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சிவனடியாா் ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com