முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி. அருகே வீட்டில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 19th December 2021 11:11 PM | Last Updated : 19th December 2021 11:11 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் சஹானா என்ற சஹானா பாத்திமா (24). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கூடலிங்கம் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து, கூடலிங்கத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம்போல், கடந்த 15 ஆம் தேதி இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சஹானா, அன்று மாலை தனது வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உடனடியாக அவரை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சஹானா சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து அவரது தாயாா் ஆசுரா அளித்த புகாரின்பேரில், நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.