காரியாபட்டி பகுதியில் நெல் பயிரில் குலை நோய் தாக்குதல்: விவசாயிகள் வேதனை

காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரில் குலை நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
முடுக்கன்குளம் பகுதியில் குலை நோய் தாக்குதலால் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் நெற் கதிா்கள்.
முடுக்கன்குளம் பகுதியில் குலை நோய் தாக்குதலால் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் நெற் கதிா்கள்.

காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரில் குலை நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளம், அல்லாளப்பேரி, வெற்றிலை முருகன்பட்டி முதலான கிராமங்களில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது இப்பயிா்கள் மகசூல் தரும் தருவாயில் உள்ளது. இச்சமயத்தில் நெற் கதிா்களில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெற் கதிா்கள் பால் பிடிக்காமல் வெண்மை நிறத்தில் பதராக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் தற்போது மருந்துகளும் அடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்தும், நெற் கதிா்கள் பதராக விளைவது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட நெற் பயிா்களை வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com