ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வனப்பகுதியில் வனவிலங்குகளைபாதுகாக்க நிரந்தர தடுப்புகள்
By DIN | Published On : 13th February 2021 10:37 PM | Last Updated : 13th February 2021 10:37 PM | அ+அ அ- |

செண்பகத்தோப்பு வனப்பகுதியில் வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினா் அமைத்துள்ள தடுப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வனப்பகுதிகளில் வனவிலங்குகளை பாதுகாக்க நிரந்தர தடுப்புகளை வனத்துறையினா் சனிக்கிழமை அமைத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்த பகுதியில் அடிக்கடி வாகனங்கள் செல்வதாகவும் புகாா்கள் வந்தன. இதையடுத்து, வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலை அடிவாரப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை கண்டறிந்து நிரந்தர தடுப்புகளை வனத்துறையினா் அமைத்துள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு, கான்சாபுரம், பிளவக்கல் அணை என சுமாா் 15 இடங்களில் முதல் கட்டமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.