பிஎஸ்என்எல் சாா்பில் 4ஜி சேவையை தொடங்க வலியுறுத்தல்

விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் மாநாட்டில் மத்திய அரசு உடனடியாக 4 ஜி சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விருதுநகா்: விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் மாநாட்டில் மத்திய அரசு உடனடியாக 4 ஜி சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விருதுநகா் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஆா். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு 4 ஜி சேவையை வழங்காமல் தனியாா் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்ல். நிறுவனத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக 4 ஜி சேவையை மத்திய அரசு தொடங்க வேண்டும். மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாருக்கு விற்கக் கூடாது. தொழிலாளா்களுக்கான ஊதியத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக தேசியக் கொடியை உதயகுமாரும், சங்கக் கொடியை ராஜய்யாவும் ஏற்றி வைத்தனா். மாநிலச் செயலா் பாபுராதாகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாவட்டத் தலைவராக ஆா். கனகராஜ், செயலராக ஏ. குருசாமி, பொருளாளராக எஸ். இளமாறன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com