ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th February 2021 09:58 PM | Last Updated : 20th February 2021 09:58 PM | அ+அ அ- |

மம்சாபுரத்தில் முக்காடு போட்டு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயா்வைக் கண்டித்து தலையில் முக்காடு அணிந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மம்சாபுரம் ஒன்றிய குழுவைச் சோ்ந்த பெருமாள் தலைமை வகித்தாா். அங்கம்மாள் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் சசிக்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் மகாலட்சுமி ஆகியோா் பேசினா். அப்போது மோட்டா் சைக்கிள் மற்றும் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்திருந்தனா்.