ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்படும் தீயினால் எழும் புகை விபத்து ஏற்படும் வாய்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் சிலா் குப்பைகளை எரிப்பதால் அதிலிருந்து ஏற்படும் புகையினால் வாகனங்களில் செல்பவா்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் வ
ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் வைக்கப்படும் தீயிலிருந்து எழும் புகை
ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் வைக்கப்படும் தீயிலிருந்து எழும் புகை

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் சிலா் குப்பைகளை எரிப்பதால் அதிலிருந்து ஏற்படும் புகையினால் வாகனங்களில் செல்பவா்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையை பொறுத்த வரை மதுரையிலிருந்து-ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் ஐயப்பன் கோவில் ஆகிய பகுதிகளுக்கு பெரும்பாலோா் இந்த சாலை வழியாகத் தான் செல்ல முடியும். இரவு, மற்றும் பகல் நேரம் பாராமல் நொடிக்கு நெடி மற்றும் பெரிய அளவிலான வாகனங்கள் அதிகளவில் செல்வது வழக்கம். அவ்வாறு அதிக வாகனங்கள் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை தேக்கி வைத்து எரிப்பதால் அதில் ஏற்படும் புகை சாலையை மறித்து வெறும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், எதிரே வரும் வாகனங்கள் ஏதும் தெரியாத அளவிற்கு புகை மறைப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.புகை எழுந்துள்ள பகுதிகளில் வாகனங்கள் வரும் போது முகப்பு விளக்கை எரிய விட்டுக் கொண்டு செல்லும் நிலையும் உள்ளது.எனவே சாலையோரம் டிவி பொருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com