விருதுநகரில் அங்கன்வாடி பணியாளா்கள் நூதனப் போராட்டம்

அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில்
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கும்மியடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கும்மியடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.

அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் அங்கன்வாடி பணியாளா்கள் கும்பியடித்து, ஒப்பாரியுடன் நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த காத்திருப்புப் போராட் டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 805 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமை அங்கன்வாடி பணியாளா்கள் கும்மியடித்து, ஒப்பாரியுடன் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியா்களை 7 ஆவது ஊதியக் குழுவில் அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை உத்தரவாக வெளியிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். முன்னதாக இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்தா் ராணி, மாவட்டச் செயலா் சாரதாபாய் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com