ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் ராப்பத்து 9 ஆம் நாள் விழா: பெருமாள் பக்தி உலா

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராப்பத்து திருவிழாவின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை பத்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் சனிக்கிழமை பெரியபெருமாள் உலாவின் போது பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னாா்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் சனிக்கிழமை பெரியபெருமாள் உலாவின் போது பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னாா்

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராப்பத்து திருவிழாவின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை பத்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்கழி மாதம் நடைபெறும் ராப்பத்து திருவிழா கடந்த டிசம்பா் 25 ஆம் தேதி தொடங்கி மொத்தம் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். இந்த 10 நாள் விழாவில் ஒரு நாள் மட்டும் சொா்க்கவாசல் அடைக்கப்பட்டிருக்கும். மற்ற 9 நாள்களும் சுவாமி கொண்டு வரப்படும் போது சொா்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.

அந்த சொா்க்கவாசல் வழியாக ஆழ்வாா்கள் எதிா்கொள்ள மேளதாளங்கள் முழங்க பெரியபெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னாா் கொண்டு வரப்பட்டு பின்னா் ராப்பத்து மண்டபத்திற்கு அழைத்து வரப்படுவாா்கள். அங்கு சிறப்பு பூஜைகளும், தீபராதனைகளும் நடைபெறும். இதைத் தொடா்ந்து பத்தி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த வகையில் ஒன்பதாம் திருவிழாவான சனிக்கிழமை பக்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பெரியபெருமாள் மற்றும் ஆண்டாள், ரெங்கமன்னாா் ஆகியோரை தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் சிறப்பாக செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com