ஆண்டாள் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி
By DIN | Published On : 07th January 2021 07:50 AM | Last Updated : 07th January 2021 07:50 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருப்பாவை ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 180 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டி நடைபெறும். அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 180 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தனபால் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கணேசன், கோயில் தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன், கோயில் ஆய்வாளா் பாண்டியன் மற்றும் புலவா் பாலகிருஷ்ணன் உள்பட கலந்து கொண்டனா்.