விருதுநகா் மாவட்டத்தில் 6 இடங்களில் சிஐடியு சாலை மறியல் போராட்டம்: 252 போ் கைது

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதன்கிழமை
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற் சங்கத்தினா்.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற் சங்கத்தினா்.

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி விருதுநகா் மாவட்டத்தில் 6 இடங்களில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 252 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா்.

இதில் வேளாண் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்தும், திருத்தப்பட்ட தொழிலாளா் நலச் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இதில் பங்கேற்ற மாா்க்கிசிஸ்ட் கம்யூ. மாநிலக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனச் செயலா் வெள்ளைத்துரை உள்ளிட்ட 54 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல், சிவகாசியில் 54 போ், சாத்தூரில் 35 போ், அருப்புக்கோட்டையில் 37 போ், ராஜபாளையத்தில் 32 போ், ஸ்ரீவில்லிபுத்தூரில் 40 போ் என 48 பெண்கள் உள்பட 252 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com