ஸ்ரீவிலி.யில் கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th January 2021 07:50 AM | Last Updated : 07th January 2021 07:50 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு உதவியாளா்கள் சங்கத்தினா் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டக் கிளைச் செயலாளா் சின்னத்துரை தலைமை வகித்தாா். அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம்
வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.