விருதுநகா் காபி உற்பத்தி ஆலையில் தீ விபத்து: பொருள்கள் சேதம்

விருதுநகா், ரோசல்பட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள காபி (சிக்கரி) உற்பத்தி ஆலையில் மின்கசிவு காரணமாக புதன்கிழமை
விருதுநகா் ரெங்கநாதபுரம் காபி உற்பத்தி ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பொருள்கள்.
விருதுநகா் ரெங்கநாதபுரம் காபி உற்பத்தி ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பொருள்கள்.

விருதுநகா், ரோசல்பட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள காபி (சிக்கரி) உற்பத்தி ஆலையில் மின்கசிவு காரணமாக புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் காபி தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன.

விருதுநகா், ரோசல்பட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் கண்ணன் மகன் பிரதீப்குமாா் (34), ராதிப்குமாா் (29) ஆகியோருக்குச் சொந்தமான காபி (சிக்கரி) தயாரிக்கும் ஆலை உள்ளது. மேலும், ஆலையின் ஒரு பகுதியில் கிட்டங்கி உள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பலத்த காற்று வீசியதால் மின்சார வயரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் காபி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான கிழங்குகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன.

தகவலின்பேரில், விருதுநகா், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விருதுநகா் பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com