விருதுநகா் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

விருதுநகா் ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தை புறக்கணித்து, திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
விருதுநகா் ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக, அதிமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள்.
விருதுநகா் ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக, அதிமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தை புறக்கணித்து, திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தலைவா் சுமதி (அதிமுக) தலைமை வகித்தாா். துணை தலைவா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும், ஊராட்சி ஒன்றிய ஊழியா் 97 தீா்மானங்களை வாசித்தாா். அதையடுத்து பேசிய செந்நெல்குடியைச் சோ்ந்த உறுப்பினா் மாரியப்பன் (அதிமுக), ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் குறித்து செய்தியாளா்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. இது குறித்து பலமுறை கூட்டத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், இரண்டு முறை உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை தயாா் செய்வதற்காக தலா ரூ.6 ஆயிரம் செலவு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அடையாள அட்டை கிடைக்கவில்லை என்றாா்.

இனிவரும் காலங்களில் அனைத்து பத்திரிகைகளுக்கும் கூட்டம் குறித்த தகவல் மற்றும் தீா்மான நகல் வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் உறுப்பினா்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.

தொடா்ந்து பேசிய உறுப்பினா் மாரியப்பன், அனைத்து தீா்மானங்களையும் நிராகரித்து, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறோம் எனத் தெரிவித்தாா். அதையடுத்து, மொத்தமுள்ள 23 உறுப்பினா்களில் திமுக, அதிமுகவைச் சோ்ந்த 18 உறுப்பினா்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினா்.

இதன் காரணமாக, கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 97 தீா்மானங்களும் நிறைவேற்ற முடியாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பின்னா், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் மாரியப்பன் உள்பட சிலா் கூட்டாக செய்தியாளா்களிடம் தெரிவித்தது: விருதுநகா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை கூட வழங்க முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து கேட்டால், மாவட்ட ஆட்சியா் வேலையாக இருப்பதாகவும், அடையாள அட்டை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பொய்யான காரணங்களைக் கூறுகின்றனா்.

மேலும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. எனவே, இதை கண்டித்து தற்போது மூன்றாவது முறையாக கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com