கட்டுமான பொருள்கள் விலை உயா்வால் பணிகள் பாதிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால், கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால், கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகுவாகப் பரவியதால் தளா்வில்லாத பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்தியாவசியத் தேவை கருதி மருந்து மற்றும் பால் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால், பொது முடக்க காலத்திலும் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் வாகனப் போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளால் கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கட்டுமானத்துக்குத் தேவையான மணல், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயா்ந்துள்ளன.

இதனால், ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வரும் பொறியாளா்கள், பணிகளைத் தொடர முடியாமல் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை ரூ.440-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது ரூ.490-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், ரூ.12 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 யூனிட் எம்.சாண்ட் ரூ. 14 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரூ.5 -க்கு விற்கப்பட்ட ஒரு செங்கல் ரூ. 8.50 -க்கும், ஒரு கிலோ இரும்பு ரூ.70 இல் இருந்து ரூ.120-க்கும், ஒரு யூனிட் ஜல்லி ரூ.2,800 இல் இருந்து ரூ. 3,300-க்கும் விற்கப்படுகின்றன.

வீட்டுக்குத் தேவையான குழாய்களின் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளது. இதன் காரணமாக நஷ்டம் ஏற்படும் என்பதால் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கட்டுமானப் பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com