சிவகாசி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

சிவகாசி கல்வி மாவட்டத்தில் நிகழ் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
சிவகாசி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியிருந்து பாடப் புத்தகங்களை லாரியில் ஏற்றும் பணியாளா்கள்.
சிவகாசி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியிருந்து பாடப் புத்தகங்களை லாரியில் ஏற்றும் பணியாளா்கள்.

சிவகாசி கல்வி மாவட்டத்தில் நிகழ் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

சிவகாசி கல்வி மாவட்டத்தில், சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கான 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் திருத்தங்கல் சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் 312 உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடா்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பாடப் புத்தகங்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், ஒவ்வொரு பள்ளி ஆசிரியா்களும் மாணவா்களின் வீடுதேடிச் சென்று புத்தகங்களை மாணவா்களிடம் வழங்குவாா்கள். மாணவா்களை புத்தகம் வாங்க பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com