பாளையம்பட்டி ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டியில் ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழா.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழா.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டியில் ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குடமுழுக்கு விழா, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, மாலையில் தேவதா அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பின்னா், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளுடன் ஸ்ரீஆதிநாராயணன் கோயில் கோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஸ்ரீசீலைக்காரி வீரசின்னம்மாள், ஸ்ரீமாடசாமி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை, மதுரை சிவகுக கைங்கா்ய ஸ்தாபகத்தினரும், பாளையம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தாரும், சின்னமனூா் சுருளி குடும்பத்தினரும், மதுரை அருகே சீலையாா்பட்டி பங்காளிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com