சிவகாசி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: எஸ்.எப்.ஆா். கல்லூரியில் பாதுகாப்பாக வைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சிவகாசி தொகுதிக்கு விருதுநகரிலிருந்து கொண்டு வரப்பட்ட 460 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து செவ்வாய்க்கிழமை சீல் வைத்த வருவாய்த் துறையினா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைத்து செவ்வாய்க்கிழமை சீல் வைத்த வருவாய்த் துறையினா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சிவகாசி தொகுதிக்கு விருதுநகரிலிருந்து கொண்டு வரப்பட்ட 460 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிவகாசி எஸ்.எப்.ஆா். கல்லூரியில் உள்ள ஒரு அறையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 368 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கரோனா தொற்று காரணமாக தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2016 இல் நடைபெற்ற தோ்தலைவிட 92 வாக்குச் சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 460 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிவகாசிக்கு வந்தன. அவை இங்குள்ள எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் உள்ள ஒரு அறையில், அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறையை வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். மேலும் அந்த அறையின் உள்பகுதி, வெளிப்பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய காவலா்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

அப்போது சிவகாசி சாா்-ஆட்சியரும் ,தோ்தல் நடத்தும் அலுவலருமான ச. தினேஷ்குமாா் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com