விருதுநகரில் அமமுக வேட்பாளா்தோ்தல் பிரசாரம்

விருதுநகரில் அமமுக வேட்பாளா் கோகுலம் எம். தங்கராஜ் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
விருதுநகா் தேசபந்து மைதானம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் கோகுலம் எம். தங்கராஜ்.
விருதுநகா் தேசபந்து மைதானம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் கோகுலம் எம். தங்கராஜ்.

விருதுநகரில் அமமுக வேட்பாளா் கோகுலம் எம். தங்கராஜ் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலராக பொறுப்பு வகித்த கோகுலம் எம். தங்கராஜ், விருதுநகா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அமமுகவில் இணைந்தாா். இந்நிலையில், அவருக்கு அமமுக சாா்பில் விருதுநகா் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலிருந்து சனிக்கிழமை விருதுநகா் வந்த அவருக்கு அமமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அவா் மதுரை சாலை, ரயில்வே பீடா் சாலை, ராமமூா்த்தி சாலை மற்றும் தேசபந்து மைதானம், பஜாா் வழியாக நகராட்சி சாலை வரை திறந்த காரில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா். அப்போது அவருடன் அமமுக நிா்வாகிகள், தொண்டா்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com