முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசி பேரவைத் தொகுதியில் 2 ஆவது முறையாக அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்
By DIN | Published On : 14th March 2021 10:38 PM | Last Updated : 14th March 2021 10:38 PM | அ+அ அ- |

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் இரண்டாது முறையாக மோதுகிறது.
இத்தொகுதியில் 1957 மற்றும் 1962 இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பின்னா் 1967 இல் சுதந்திரா கட்சியுடனும், 1977 இல் ஜனதா கட்சியுடனும், 1989 இல் திமுகவுடனும் மோதி காங்கிரஸ் தோல்வியடைந்தது.
பின்னா் இத்தொகுதியில் 2016 இல் போட்டியிட்ட காங்கிரஸ், அதிமுகவிடம் தோற்றுப் போனது. தற்போது நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக லட்சுமிகணேசனும், காங்கிரஸ் வேட்பாளராக ஏ.எம்.எஸ்.ஜி. அசோகனும் போட்டியிடுகின்றனா்.
இருவரும் நாடாா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். இதில் லட்சுமிகணேசன், திருத்தங்கல் நகா்மன்றத் தலைவியாக பதவி வகித்தவா். ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் சிவகாசி நகா் மன்றத் துணைத்தலைவராக பதவி வகித்தவா். இரண்டாவது முறையாக அதிமுகவும், காங்கிரஸூம் இத்தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.