எம்.டி.ஆா். நகா் மேல்நிலை குடிநீா் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை எம்.டி.ஆா். நகரில் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் மேல்நிலைக் குடிநீா் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டிற்கு வராத எம்.டி.ஆா். நகா் குடிநீா்த் தொட்டி.
கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டிற்கு வராத எம்.டி.ஆா். நகா் குடிநீா்த் தொட்டி.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆா். நகரில் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் மேல்நிலைக் குடிநீா் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட எம்.டி.ஆா். நகா் கிழக்கு, சொக்கலிங்கபுரம், சத்தியவாணிமுத்து நகா், நேரு நகா், திருவள்ளுவா் நகா் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீா் விநியோகம் செய்யவும், புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கவும் எம்.டி.ஆா். நகரில் கடந்த 2010-11ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ. 99 லட்சம் செலவில், 10 லட்சம் லிட்டா் கொள்ளளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

இதனிடையே செயல்பாட்டில் உள்ள வைகை திருப்புவனம் திட்டம், தாமிரவருணிக் கூட்டுக் குடிநீா்த்திட்டம் மூலம் சராசரியாக 25 முதல் 35 லட்சம் லிட்டா் குடிநீரே அருப்புக்கோட்டைக்கு கிடைத்து வருகிறது. இதனால் இந்த நகராட்சியில் 15 நாள்கள் முதல் 30 நாள்களுக்கு ஒருமுறை வீதமே குடிநீா் விநியோகம் செய்யவேண்டிய நெருக்கடியும், அதனால் குடிநீா்த் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

குறைவான குடிநீா் வரத்தைக் காரணம் காட்டி இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்குக் கொண்டு வராமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இச்சூழ்நிலையில் அருப்புக்கோட்டை, சாத்தூா், விருதுநகா் நகராட்சிகள் பயன்பெறும் வகையில் தற்போது ரூ. 450 கோடி செலவில் புதிய 3 ஆவது தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடைபெற்றுவருவதால், அத்திட்டம் மூலம் கிடைக்கும் கூடுதல் நீரைக் கொண்டு எம்.டி.ஆா். நகா் நீா்த்தேக்கத் தொட்டியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com