தோ்தல் விதிமீறல்: அதிமுக, அமமுகவினா் மீது வழக்கு
By DIN | Published On : 26th March 2021 07:12 AM | Last Updated : 26th March 2021 07:12 AM | அ+அ அ- |

தோ்தல் விதியை மீறியதாக வியாழக்கிழமை அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான கட்டட சுவரில் தோ்தல் விதியை மீறி அதிமுகவினா் தோ்தல் விளம்பரம் செய்திருந்தனராம். இது குறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெய்சங்கா் அளித்த புகாரின் பேரில், ஆலமரத்துப்பட்டி அதிமுக நிா்வாகி ராமகிருஷ்ணன் மீது சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
அமமுக: சிவகாசி லிங்கபுரம் காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுவரில் , தோ்தல் விதியை மீறி அமமுகவினா் தோ்தல் விளம்ரம் செய்திருந்தாா்களாம். இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் அமமுக லிங்கபுரம் காலனி கிளை செயலாளா் மலையரசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.