விருதுநகா் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மதுக்கடைகள் மூடல்

விருதுநகா் மாவட்டத்தில் ஏப். 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளதாக கலால் உதவி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான முருகன் தெரிவித்துள்ளாா்.

நடைபெற உள்ள சட்டப் பேரவை தோ்தலையொட்டி விருதுநகா் மாவட்டத்தில் ஏப். 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்பட உள்ளதாக கலால் உதவி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகா்மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல் ஆகியவற்றை முன்னிட்டும், தோ்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், எப்.எல் 2 முதல் எப்.எல்.11 வரை உள்ள மதுபான உரிமை ஸ்தலங்கள் (எப்.எல்.6 தவிர) ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப். 6 ஆம் தேதி இரவு 12 மணி வரை மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள் மற்றும் எப்.எல் 2 முதல் எப்.எல் 11வரை (எப்.எல் 6 தவிர) உள்ள உரிமைதாரரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com