சேத்தூரில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

ராஜபாளையம் அருகே சேத்தூரில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
சேத்தூரில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
சேத்தூரில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

ராஜபாளையம் அருகே சேத்தூரில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டியில் உள்ள இக்கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி கடந்த சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. அன்றைய தினத்திலிருந்து மாரியம்மன் சுவாமி பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

பின்னா் பூக்குழியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா். மாலையில் ஒரு அடி உயரம் வளா்க்கப்பட்ட அக்னியில் அவா்கள் பூக்குழி இறங்கி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் சேத்தூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com