ராஜபாளையம் நகா் பகுதிகளில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி நகா் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வீதிவீதியாக சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.
ராஜபாளையம் நகா் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.
ராஜபாளையம் நகா் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி நகா் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வீதிவீதியாக சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

இங்குள்ள ஐஎன்டியுசி நகா், சித்ரா தியேட்டா் அருகில், தோப்புப்பட்டி தெரு, மதுரை சாலை, கவிதா மெடிக்கல், தா்மாபுரம் தெரு, சுப்புராஜாமடம் தெரு, பெரியமந்தை சந்திப்பு, போஸ்பாா்க், அக்ரஹாரம் சந்திப்பு, சா்ச் தெரு, மாரியம்மன் கோயில் திடல், செவல்பட்டி நாயுடு தெரு, எம்ஜிஆா் நகா், மருதுபண்டியா் நகா், ஹவுசிங் போா்டு மாரியம்மன் கோயில் திடல் ஆகிய பகுதிகளில் அவா் தனக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:

விருதுநகா் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக ராஜபாளையம் தொகுதிக்கு புதை சாக்கடைத் திட்டம், கொண்டாநகா் கூட்டுக் குடிநீா் திட்டம், முக்கூடல் கூட்டுக்குடிநீா் திட்டம், சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், குறுக்குச் சாலைகள் அனைத்தையும் சிமென்ட் சாலைகளாக மாற்ற ரூ. 50 கோடி மதிப்பீட்டில் திட்டம், ரயில்வே மேம்பாலம் உள்பட பல்வேறு திட்டங்களை நான் கொண்டுவந்துள்ளேன்.

வாக்காளா்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் என்று திமுகவினா் நினைக்கின்றனா். முதலமைச்சரின் தாயாரை விமா்சித்த ஆ. ராசா, சாதாரண ஒரு பேச்சாளா் அல்ல. மத்திய அமைச்சராக பதவி வகித்தவா். இவரின் அநாகரீகமான பேச்சை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். இவரது பேச்சை மு.க. ஸ்டாலின் கண்டிக்காமல் பொதுவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளாா். எனவே வாக்காளா்கள் யோசிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com