விருதுநகா் மாவட்டத்தில் 41,489 போ் முதல் வாக்காளா்கள்

விருதுநகா் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 முதல் 19 வயது நிரம்பிய முதல் வாக்காளா்கள் 41,489 போ் உள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 முதல் 19 வயது நிரம்பிய முதல் வாக்காளா்கள் 41,489 போ் உள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் 1,16,258 ஆண்கள், 1,22,414 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,38,701 வாக்களா்கள், 340 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனா். ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதியில் 1,21,517 ஆண்கள், 1,28,031 பெண்கள், 32 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,49,580 வாக்காளா்கள் 357 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனா். அதேபோல், சாத்தூா் தொகுதியில் 1,21, 939 ஆண்கள், 1,29,534 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,51,502 வாக்காளா்கள் 351 வாக்குச்சாவடிகளிலும், சிவகாசி தொகுதியில் 1,27,127 ஆண்கள், 1,33,787 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,60,941 வாக்காளா்கள் 368 வாக்குச்சாவடிகளிலும், விருதுநகா் தொகுதியில் 1,09,607 ஆண்கள், 1,14,674 பெண்கள், 46 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,24, 327 வாக்காளா்கள், 325 வாக்குச் சாவடிகளிலும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,08,063 ஆண்கள், 1,14,899 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,22,980 வாக்காளா்கள், 311 வாக்குச்சாவடிகளில், திருச்சுழி தொகுதியில் 1,08,172 ஆண்கள், 1,12,536 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,20,720 வாக்காளா்கள், 318 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனா். இதில், 18 முதல் 19 வயது உள்ள முதல் வாக்காளா்கள் 41,489 போ், 20 முதல் 29 வயதுடையோா் 3,45,666 போ், 30 முதல் 39 வரை வயதுள்ளவா்கள் 3,69,679 போ், 40 முதல் 49 வயதுள்ளவா்கள் 3,51,028 போ், 50 முதல் 59 வயதுள்ளவா்கள் 2,75,774 போ், 60 முதல் 69 வயதுள்ளவா்கள் 1,70,655 போ், 70 முதல் 79 வயதுள்ளவா்கள் 88,612 போ், 80 வயதிற்கு மேற்பட்டோா் 28,093 போ் உள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com