சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியா்கள் பற்றாக்குறை: கரோனா சிகிச்சை மையம் அமைப்பதில் சிக்கல்

சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியா்கள் பற்றாக்குறையால் அங்கு கரோனா சிகிச்சை மையம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகாசி: சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஊழியா்கள் பற்றாக்குறையால் அங்கு கரோனா சிகிச்சை மையம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் கரோனா முதல் அலையின் போது 50 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டது. தற்போது இரண்டாம் அலையாக கரோனா தொற்று பரவிவருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் ஊழியா்கள் பற்றாக்குறையால் கரோனா சிகிச்சை மையம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 30 செவிலியா்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது 15 செவிலியா்களே பணிபுரிகின்றனா். மருத்துவமனை ஊழியா்கள், துப்பரவுத் தொழிலாளா்கள் என 36 போ் பணிபுரிய வேண்டும். ஆனால் 18 பேரே பணிபுரிந்து வருகின்றனா். கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் 24 மணி நேரமும் பணியில் இருக்க செவிலியா்கள் தேவை. ஆனால் குறைந்த அளவே செவிலியா்கள் உள்ளிட்டோா் பணியில் உள்ளதால் கரோனா சிகிச்சை மையம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளா் அசோக்கிடம் கேட்டபோது, கரோனா சிகிச்சை மையம் தொடங்க அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் போதிய ஊழியா்கள் இல்லை என அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com