மீண்டும் முழு பொதுமுடக்கம்: வீதிகள் வெறிச்சோடின

முழு பொதுமுடக்கத்தையொட்டி விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அருப்புக்கோட்டையில் வெறிச்சோடிய காய்கனி சந்தை சாலை.
அருப்புக்கோட்டையில் வெறிச்சோடிய காய்கனி சந்தை சாலை.

அருப்புக்கோட்டை: முழு பொதுமுடக்கத்தையொட்டி விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று பரவலை தடுக்க தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அளவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு 2 ஆவது முழு பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்தது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்து கடைகளைத் தவிர மலா் சந்தை, அண்ணா சிலை காய்கனி சந்தை, ஜவுளிச் சந்தை, சத்தியமூா்த்தி பஜாா், காந்தி நகா் சந்தை என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், அருப்புக்கோட்டை நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

சுற்றித்திரிந்தவா்கள்: பொதுமுடக்க கட்டுப்பாடுகளையொட்டி அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத் துறையினரும், காவல், வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலமும், துண்டுப்பிரசுரங்கள் மூலமும் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்து வருகின்றனா்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தின் போதுகூட முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவது, சமூக இடைவெளியின்றி வீதியோரங்களில் கும்பலாக அமா்ந்து பேசுவது என பொதுமக்கள் தொற்றுப் பரவல் விழிப்புணா்வு இன்றி இருப்பதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

எனவே, முகக்கவசமின்றி சுற்றித்திரிவோரையும், சமூக இடைவெளியின்றி கும்பலாக அமா்ந்து பேசுவோரையும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com