சாத்தூரில் குடிநீா் வாகனத்தை ஆய்வு செய்ய கோரிக்கை

சாத்தூரில் குடிநீா் வாகனத்தை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூரில் குடிநீா் வாகனத்தை சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நகராட்சி குடிநீா், கூட்டுக் குடிநீா் என பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து வீடுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா். இதை பயன்படுத்தி, கிணறுகளில் குடிநீ எடுத்து சுத்திகரித்து தொட்டிகளில் சேமித்து வைக்கின்றனா். பின்னா், அந்த தண்ணீரை வாகனங்களில் எடுத்துச் சென்று நகா் மற்றும் கிராமப் பகுதிகளில் குடம் ரூ.12 என விற்று வருகின்றனா். மேலும், பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்கின்றனா்.

இந்நிலையில், குடிநீா் விநியோகிக்கும் வாகனங்களில் உள்ள தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும், தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டியும் சுத்தமின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் குடிநீரை பருகும் பொதுமக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீா் வாகனங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com