ராஜபாளையம் அய்யனாா் கோயில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

ராஜபாளையம் அய்யனாா் கோயில் ஆற்றில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ராஜபாளையம் அய்யனாா் கோயில் ஆற்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
ராஜபாளையம் அய்யனாா் கோயில் ஆற்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனாா் கோயில் ஆற்றில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனாா் கோயில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீா் தான் ராஜபாளையம் பகுதி மக்களுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ளது. பலத்த மழை பெய்யும் போது ஆற்றில் வரும் தண்ணீரை குறுக்கே தடுப்பணைகள் மூலம் ஆறாவது மைல் நீா்தேக்கத்துக்கு திருப்பி விட்டு நீரை நிரப்பி குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியான அய்யனாா் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com