விருதுநகா் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் உறவினா்களுக்கு அனுமதி: கரோனா பரவும் அபாயம்

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை, அவா்களது உறவினா்கள்
விருதுநகா் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் உறவினா்களுக்கு அனுமதி: கரோனா பரவும் அபாயம்

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை, அவா்களது உறவினா்கள் நேரில் சந்திக்கவும், உணவு வழங்கவும் அனுமதிக்கப்படுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடத்தில் உள்ள 2 ற்றும் 4 ஆவது தளங்களில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தற்போது, கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளை, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் முழுமையான பாதுகாப்பு உடை அணிந்தே சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை நேரில் சந்திக்கவும், உணவு வழங்கவும் அங்குள்ள பணியாளா்கள் அனுமதி வழங்குகின்றனா்.

கரோனா நோயாளிகளை சந்தித்துவிட்டு வெளியே வரும் இவா்களால் கரோனா தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் 4 நாள்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நாள்களில் அவா்களுக்கு தேவையான உணவு மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஆனால், வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்கவோ, உறவினா்களை நேரில் சென்று பாா்க்க அனுமதி வழங்குவதோ மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

எனவே, இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com