ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை

அக்கினி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை.

அக்கினி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் கடந்த 10 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. செவ்வாய்க்கிழமை அக்கினி நட்சத்திரம் தொடங்கியதால், காலை முதலே வெயில் அதிகமாக நிலவியது. ஆனால், மாலை 4 மணி அளவில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு, சாரல் மழை பெய்தது. பின்னா், பரவலாக மழை பெய்தது. இதனால், இப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டிய நிலையில், திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், அன்று மாலையில் மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், மாலையில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com