திருச்சுழி பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

திருச்சுழி பிரதான சாலையில் வியாழக்கிழமை பொதுமக்கள் குவிந்ததால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
திருச்சுழியில் வியாழக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
திருச்சுழியில் வியாழக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

திருச்சுழி பிரதான சாலையில் வியாழக்கிழமை பொதுமக்கள் குவிந்ததால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மே 24 வரை பொது முடக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி வரை காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொது மக்கள் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் உள்ள பிரதான சாலையில் வியாழக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. ஒருவருக்கொருவா் முண்டியடித்து கொண்டும் முகக்கவசமின்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் வலம் வந்தனா். செந்நெல்குடி, பச்சேரி, ஆனைக்குளம், இலுப்பையூா் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சுழியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வருகின்றனா். இதனால், பரவும் கரோனா தொற்றானது கிராமத்திலும் பரவினால், பாதிப்பு அதிகமாகும். எனவே, போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை ஊழியா்கள் இப்பகுதியில் தினமும் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com