அருப்புக்கோட்டை தனியாா் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம்: அமைச்சா் தகவல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேலும் ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேலும் ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கரோனாத் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் களப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை ஆய்வாளா் சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் பேசியது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் ஆகிய கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இதனை பின்பற்றாத தொழிலாளா்களுக்கு வேலை வழங்கக் கூடாது. அருப்புக்கோட்டையில் தற்போது கரோனாவுக்கு தனியாா் கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர கூடுதலாக நகரிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் விடுதியிலும் கரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில் சுகாதாரம், மருத்துவம், வருவாய், காவல் துறை அலுவலா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com