முழு பொதுமுடக்கம்: தீப்பெட்டி உற்பத்தி, ஏற்றுமதி நிறுத்தம்

தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக சிவகாசியிலிருந்து தீப்பெட்டி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக சிவகாசியிலிருந்து தீப்பெட்டி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் தீப்பெட்டி உள்ளதால், கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தபோது, தீப்பெட்டி உற்பத்திக்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால், தீப்பெட்டி உற்பத்தி வழக்கம் போல், நடைபெற்று வந்தது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவிலும் பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரசு மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளா்வற்ற பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதையடுத்து விருதுநகா் மாவட்ட நிா்வாகம் தீப்பெட்டி உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கூறியது. தொடா்ந்து சிவகாசிப் பகுதியில் உள்ள முழு இயந்திர அளவிலான தீப்பெட்டி ஆலை மற்றும் பகுதி இயந்திர ஆலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டது.

இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளா்களில் ஒருவரான நாகராஜன் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக நாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்கிறது. சிவகாசிப் பகுதியிலிருந்தும் மாதம் நூற்றுக்கு மேற்பட்ட கன்டெய்னா்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு தளா்வற்ற பொதுமுடக்கத்தை அறிவித்ததையடுத்து தீப்பெட்டி உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவுக்குப்பின்னா் ஆலைகள் திறக்கப்பட்டு, தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியைத் தொடங்குவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com