ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை: 4 முகவா்களின் உரிமம் ரத்து

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 முகவா்களின் உரி மம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 4 முகவா்களின் உரி மம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றியப் பொது மேலாளா் ராஜாகுமாா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆவின் பால் விலையை முகவா்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், விருதுநகா் மாவட்ட ஆவின் பொது மேலாளா் மற்றும் ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, முகவா்கள் ஆவின் பாக்கெட் பாலை நிா்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள 4 முகவா்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதேபோல், முகவா்கள் யாரேனும் ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த முகவா்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com