பேருந்து நிலைய வாருகால் அடைப்பால் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலைய வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலைய வாருகாலில் குப்பைகள் அடைத்து தேங்கியுள்ள கழிவுநீா்.

அருப்புக்கோட்டையில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகா் வழித்தடங்களுக்கு மட்டும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலைய நுழைவாயில் அருகே உள்ள வாருகால் பல மாதங்களாக மக்காத குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் தேங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் துா்நாற்றத்துடன் சுகாதாரக் கேடான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாருகால் அடைப்பைச் சரிசெய்து கழிவுநீா் தேங்காத வண்ணம் சீரமைத்து, சுகாதாரத்தைப் பேண வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com